Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக சுகாதராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்ற செய்தி உண்மையில்லை. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், “கடந்த பிப்ரவரியில் அதிகளவில் நடைபெற்ற திருமணம், இறப்பு, அரசியல் கூட்டங்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |