Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |