Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை……!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா கூடுதல் தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகு நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |