Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் தொடங்கவிருக்கிறது.

அதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பு பற்றியும், உயரதிகாரிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்த ஆலோசனை கூட்டம் நாளை காலை 11.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வெ. இறையன்பு சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் தினசரி  கொரோனா பாதிப்பு  1,200 ஆக குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை, பள்ளிகள் திறப்பு, மழைக்காலம் போன்ற நிகழ்வுகளில் மேற்கொள்ளவேண்டிய தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தான் தமிழகத்தில் அடுத்தக்கட்ட ஊரடங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |