தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள புறநோயாளிகளுக்கான படுக்கை அறை புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தப்படும் படி எச்சரிக்கை விடுத்து உள்ளோம். நைஜீரியாவில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள், 8000 ஐசியு படுக்கைகள் தயாராக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.