தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடு விதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.