Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அடுத்த 3 வாரம் முக்கியமான காலகட்டம்…. சுகாதாரத்துறை செயலாளர்…!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது.

மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையில் அடுத்த 3 வாரம் மிக முக்கியமான காலகட்டம் என்பதால், மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அடுத்த 3 வாரம் முக்கிய காலகட்டம் என்றால் ஏன் பள்ளிகள் திறக்கப்பட்டது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது என்பது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவில்லை. இந்த எச்சரிக்கையால் வரும் வாரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |