Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. ஆலோசனை கூட்டம் தொடக்கம்…. அரசின் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.

அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் (பிப்..12)இன்றுடன் நிறைவடைவதாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் (பிப்..12) நாளை முதல் ஊரடங்கில் புதிய தளர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Categories

Tech |