தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து புதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு உருமாறிய கொரோனா வந்தாலும், அதைக் கட்டுப்படுத்தக் கூடிய கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.