நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது 51.81 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள், மூடப்பட்ட சிகிச்சை சிறப்பு மையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகமாக பகுதிகளில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.