தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நினைவு இல்லத்தை சுற்றிப் பார்த்தார். சசிகலாவின் இந்த அதிரடி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories