விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 18 பேரும், திமுக சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவ்வாறு முத்தையா உயிரிழந்ததால் 2-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி விரைவில் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் மட்டும் தேர்தல் ரத்து என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.