Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை…. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு….. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

வரும் மார்ச் 1-ஆம் தேதி அன்று வங்கக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மார்ச் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து தென் மாவட்டங்களில் ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன்பின் பிப்..27 (இன்றும்), பிப்..28 (நாளையும்) தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலும் வரண்ட வானிலையே நீடிக்கும். மார்ச் 1 ஆம் தேதி வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் கடலோர மாவட்டங்கள், அண்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 2-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதன்பின் மதுரை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பின் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மார்ச் 1 ஆம் தேதி வங்கக் கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மேலும் 40-60 கிமீ சூறாவளி காற்று வீசப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |