Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் காய்ச்சலா?….. 10 நாட்களுக்கு பள்ளி விடுமுறை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை வருடங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு குறைந்து மருத்துவர்களின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து விஷக் காய்ச்சல் போன்று ஒரு நோய் பரவி சளி, இருமல், தொண்டை வலி, உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் கொரோனா தொற்று நோய் வந்தால் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் அந்த அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த விஷக்காய்ச்சல் பெரிது பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.தொற்றுநோய் போன்று பரவும் இந்த விஷக்காற்றலை கட்டுப்படுத்த அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்ய துவங்கி உள்ளதால் சளி, காய்ச்சலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது இயல்பான பிரச்சினை என்றாலும் அண்டை மாநிலத்தில் நிலவி வரும் சூழல் தமிழகத்துக்கு சற்று பயத்தை கொடுத்துள்ளது. இது குறித்து தமிழக சுகாத்துறை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலை வெளியிடவில்லை. இருப்பினும் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் சம்பந்தமாக சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணி துறை மற்றும் கல்வித்துறையின் உயரதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விஷக் காய்ச்சலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்கேஜில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Categories

Tech |