தமிழகத்தின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினமும் 22 என்று எண்ணிக்கையில் இருந்து தற்போது 2700 என்று உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருகின்றன.
தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தாலும், 40 சதவீதத்திற்கும் மேல் தொற்றுக் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால் தான் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதுபோன்ற நிலை ஏற்படவில்லை. எனவே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் தொற்று பரவல் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாக பரவி வருவதால் அங்கு மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.