தமிழகத்தில் மீண்டும் சுழற்சிமுறை வகுப்புகளை நடத்துவதற்கு அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே மாணவர் உட்பட 12 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, எட்டு பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்தது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால் பழைய முறைப்படி சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.