தமிழகத்தில் கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்களின் விலை அதிகரித்தது. அதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நேரத்தில் மே ஒன்றாம் தேதி மதுக்கடைகளை மூட தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1-ம் முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் அன்று டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் மாநிலம் முழுவதும் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.