Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… நாளை முதல் 4 நாட்களுக்கு…. மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

அதாவது டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |