Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?…. பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகளை மூடக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று மாணவிகள் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் வேறு நடைபெறுவதால் தேர்தல் முடியும் வரை மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |