Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அதனால் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா காரணமாக சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தியது போல மீண்டும் நடத்தலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் கருத்துக்களை தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. எனவே நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |