Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்….?  அமைச்சர் கொடுத்த திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் தொற்றின் இரண்டாம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அவதாரமாக ஒமைக்ரான்  வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  ஒமைக்ரான்  வைரஸ் தொற்று தொடர்பாக சுகாதாரத் துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. பொது முடக்க தளர்வை அமல்படுத்தும் போது மருத்துவ ஆலோசனை குழுவை தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகின்ற பொது முடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |