Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?….. உண்மை நிலவரம் என்ன?…. கல்வித்துறை விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் 2018 ஆம் வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சாமானிய மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரக்கூடிய அங்கன்வாடிகூடங்களில் LKG, UKG குழந்தைகளுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி பெற்ற 52,933 குழந்தைகளுக்கும், LKG, UKG வகுப்புகளை சோதனை மேற்கொண்டு ஆரம்பிக்க அரசாணை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2019-2020 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம், சென்னை போன்ற பெருநகரங்களில் பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி போன்றவை அரசின் தரப்பில் வழங்கப்பட்டது. மேலும் LKG, UKG வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதற்கு தொடக்கக்கல்வி இயக்கம் சார்பாக அந்தந்த ஒன்றியங்களில் கூடுதலாகவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த அங்கன்வாடி கூடங்களில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக் கூடங்களை நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் தலைமை ஆசிரியர்கள் மழலையர் பள்ளியை சரியாக பார்த்து கொள்ளாதது தெரியவந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என்று மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களுக்கு பேச்சு வாக்கில் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்ச்சை வந்தது.

இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு தெரிவிக்க தொடக்கக்கல்வித் துறை சார்பாக ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது, அங்கன்வாடியில் செயல்பட்டு வரும் இந்த பள்ளிகள் மூடப்படும் என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது. இது குறித்து தொடக்கக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியபோது 2,381 அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் மூடப்படாது. அத்துடன் அங்கு வகுப்புகள் நடத்த தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் நிரப்ப வேலைகள் நடந்து கொண்டு வருகிறது. ஆகவே சீக்கிரம் அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |