Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….. பட்ஜெட்டில் வெளியாகுமா அறிவிப்பு….?!!!!!

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது  இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டுமெனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றும்படியும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சியின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பல்வேறு மாதங்கள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாத காரணத்தினால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் இந்த நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிற மாநிலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டமானது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே அனைத்து ஊழியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து பழையஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த உத்தேசம் கிடையாது என அதிர்ச்சியான பதில் வெளியாகியுள்ளது. எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்தாகுமா என்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |