Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இதனால் தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |