Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த பகுதியில் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மார்ச் 15ஆம் தேதி, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |