Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மாதக்கணக்கில் ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காணொளி மூலம் மருத்துவ பரிந்துரை வழங்கப்படுகிறது. மாத கணக்கில் ஊரடங்கு வரக்கூடாது என்பதுதான் முதல்வரின் கருத்து ஆகும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 4 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளன. இதனிடையில் சிறார் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது. சென்னையில் 21,000 பேர் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே தொற்றின் தன்மை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Categories

Tech |