Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்கா ? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனோடு ஒமைக்ரான் வைரஸும் பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளையும்,  நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளி –  கல்லூரிகள் செயல்பட்டு வந்த நிலையில்,  தற்போது பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு இருந்து வரும் நிலையில்,  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுமா ? என்பது தெரிய வரும். ஜனவரி 30-ஆம் தேதி ஞாயிறு பொதுமுடக்கம் தொடருமா ? என்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட  உள்ளது.

Categories

Tech |