Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு?!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார்.

மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் & கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டார். அதேபோல் மார்ச் 2-ஆம் தேதி வரை இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் என்று அறிவித்தார். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, அரசு மூத்த அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது, தடுப்பூசிகள் செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது, நோய் தொற்றின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசு கொரோனா பரவல் அதிகமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |