தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது.
தற்போது சீனாவின் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் நோய் தொற்று வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இதில் குறிப்பாக சாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் முழுவதுமாக குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பும் இல்லை. தொற்று பரவல் அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள் ளப்பட்டு இது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.