தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைத்து மக்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று இரண்டாயிரத்தி தாண்டி அதிகரித்து வருவதால் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இரவு நேர ஊரடங்கு கள், தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.