தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, ஈரோடு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக ஐ சி எம் ஆர் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் மருத்துவர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். அதனால் கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.