தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் கூறியிருந்த நிலையில், பிரபல லாட்டரி தாதா என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டின், நிதியமைச்சர் பி. தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு வருமா? என்று அச்சம் எழுந்துள்ளது.