தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர்.
மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.