புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அரியலூர், கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்ட ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.