தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு உட்பட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப் படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மீன்களின் விலை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்க உள்ளதால் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories