Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முகக்கவசம், சானிடைசர்கள் விலை திடீர் உயர்வு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் ஒரு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பரவலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை நிர்ணயித்தது. அதன்படி என்.95 மாஸ்கை ரூ.22-க்கும், சர்ஜிக்கல் மாஸ்க் ரூ.5-க்கும் விற்பனைசெய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது.

தற்போது அதன் விலை உயர்ந்துள்ளது. என்.95 மாஸ்க்கின் விலை ரூ.22-லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. ரூ.44 இருந்து 100 வரையில் முகக்கவசத்தை  தற்போது விற்பனை செய்கிறார்கள். சர்ஜிக்கல் மாஸ்க்கின் விலை ரூ.10 ஆக அதிகரித்துள்ளது. சானிடைசர்கள் விலை ரூ.110-ல் இருந்து உயர்ந்துள்ளது. ரூ.150 முதல் 200 வரை (200 மி.லி) அதனை விற்பனை செய்கிறார்கள். அதனால்  தமிழக அரசு  விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |