Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக கவசம் கட்டாயம்…. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…!!!!!!

தமிழகத்தில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை  ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்   ராமமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் முக கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் அதற்கு மாறாக முக கவசம் சுவாச கோளாறு உள்ளிட்ட உடல் நல கோளாறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் முக கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது தவறாது எனவும் 500 ரூபாய் குறைவான தொகையல்ல எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத்  பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்திருப்பதாக கூறி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

Categories

Tech |