Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு… இனி ஆம்லெட், ஆப்பாயில் சாப்பிடுவது ரொம்ப கஷ்டம்…. ஒரு முட்டை விலை இவ்வளவா….???

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் ஏற்கனவே 4.20 ரூபாயாக இருந்த ஒரு முட்டையின் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4.70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இனி ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் விலை உயர்வு என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரையில், முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் சில்லரை விற்பனையில் 5 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.தற்போது முட்டை விலை உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்களும் இல்லத்தரசிகளும் கவலையடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாகவே முட்டை விலை உயர்ந்து வருகிறது.

Categories

Tech |