தமிழகத்தில் முதல்முறையாக மியாட் மருத்துவமனையில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் நவீன எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக அதிநவீன வசதிகளை கொண்ட நிகழ்வேரை ‘இன்ட்ரா ஆப்ரேட்டிவ் முழு உடலிற்கான மொபைல் 32 லைட்ஸ்’ என்ற நடமாடும் சிசி ஸ்கேன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சேப்பாக்கம் திருநெல்வேலி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த இயந்திரம் மூலம் முழு உடல் சிடி ஸ்கேன் செய்யவும், அறுவை சிகிச்சையை வேகமாகவும், துல்லியமாகவும், 8 மடங்கு பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது.
மேலும் அறுவை சிகிச்சையில் சர்வதேச தரத்தை வழங்க உதவுகிறது. அதிக துல்லியம் என்பதால் வெற்றிக்கான அதிக வாய்ப்புகளையும் மேம்படுத்த முடியும் மற்றும் விரைவாக மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வீடு திரும்புவதையும் சாத்தியமாக முடியும் என்று தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சையின் வெவ்வேறு கட்டங்களில் நரம்புகள், ரத்த நாளங்கள் மற்றும் மூளை திசுக்களின் உயர்த்தெறிவுத் திறன் படங்களை அறுவை சிகிச்சை நிபுணர்கள் நிகல் நேரத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இதனால் அறுவை சிகிச்சை அறையிலேயே கிட்டத்தட்ட பூஜ்ஜியம் பிழை முடிவுகளுக்கு உதவுகின்றது. இது குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு கூட முற்றிலும் பாதுகாப்பானதாக பார்க்கப்படுகின்றது.