தமிழகத்தில் மேலும் 3 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றன.
அந்த விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள், தமிழகத்தில் நடப்பாண்டில் மேலும் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துச் சான்றிதழ்களையும் செல்போன் மூலமாக பெறும் வகையில் இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் சென்ற முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.