தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் கொரோனா குறையாததால் இன்று காலை 10 மணிக்கு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக்கு பிறகு மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.