தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே திரியக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கால் முழு பயனை பெற்று கொரோனா பரவல் குறைந்து வருவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை அரசு உருவாக்கி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று மட்டும் 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.