இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 2 க்கு பிறகும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். கொரோனா குறையும் வரையில் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விதிகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களும் திமுகவினரும் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.