Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு வரப் போகிறது என்று வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக 2 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு கடந்துள்ளது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அவ்வபோது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு வரப் போகிறது என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீண்டும் வேகமெடுத்து கொரோனா பரவலைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |