தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வங்கிக் கடன் பெறும்போது செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் பதிவு கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் வரை விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.