முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார்.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்ததன் காரணமாக, தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் சென்று வருகின்றனர். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்தால் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறையினர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் கொரோனா 2-வது அறையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறுகிறார்கள். உங்களை வலியுறுத்தி கேட்கிறேன் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார் .