தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா தாகம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது சிறந்த பலனை தராது என்றும், முழு ஊரடங்கின் போது சில நாட்கள் பாதிப்பு குறைந்து இருந்தாலும், ஊரடங்கு தளர்வு பிறகு மீண்டும் கொரோனா அதிகரிக்கும். ஆனால் தமிழகத்தில் இப்போதுள்ள நிலைமை தொடர்ந்து நீடித்தால் கண்டிப்பாக முழு ஊரடங்கு தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.