Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு…? கடுமையான கட்டுப்பாடுகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்று அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டு மைதானங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |