நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், பத்திரிகைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்கள் செய்திகளைைை சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை பத்திரிகைகளை கொண்டுச் செல்லும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.