Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

1.11.2022 நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். சென்னை, செங்கல்பட்டு,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓர் இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 2.11.2022 நாளை மறுநாள் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 3.11.2022 , 4.11.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தின் ஒரே இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது சென்னையில் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது அல்லது கன மழை பெய்யக்கூடும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |